அபிவிருத்தி அலகு

திணைக்களத்தின் அபிவிருத்தி அலகானது தொழில்நுட்டப ஆலோசணைகள் மற்றும் பங்கு தார்ர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பை நல்குகின்றது. அதாவது ஏற்றுமதி விவசாய பயிர் துறையின் மேம்பாட்டினை கருத்திற் கொண்டு அவர்களுக்கான நடுகை பொருட்களை உற்பத்தி செய்து வினியோகிப்பதுடன் நிதி உதவி தொகைகளையும் வழங்கு கின்றது. இந்த அலகு மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) தலைமை தாங்குகின்றார். பணிப்பாளர்கள் மூவர் (அபிவிருத்தி) ஆதரவு நல்குகின்றனர். அவர்களின் ஒவ்வொருவரும் இரண்டு மாகாணங்களில் கடமைகளை மேறகொள்கின்றனர். அவர்கள் ஏற்றுமதி விவசாய பயிர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் திறனாக முகாமை செய்து அமுல்படுத்துவார்கள். அதற்கும் மேலாக உதவிப் பணிப்பாளர்கள் முறையே மாவட்டங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். விரிவாக்கல் பணிமனை வீச்சில் பொறுப்பாக விரிவாக்கல் உத்தியோகத்தர்களும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அலகுகளுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அபிவிருத்தி அலகின் சேவைகள மற்றும் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஆதரவு பதவியனியினராக செயற்படுகின்றனர். இந்த அலகின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் சேவைகள் பிரதானமாக இலங்கையின் ஈரவலய மற்றும் இடைவெப்ப வலயத்தை உள்ளடக்கிய 14 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வு கூறுகின்றது. அதாவது கண்டி, மாத்ளை, நுரெலியா, குருணாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா  காலி, மாத்தறை ஹம்பந்தோட்டை கேகாலை இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனராகலை, மாவட்டங்கள் உள்ளடங்கி உள்ளன. 2016 ஆம் ஆண்டின் அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம் மாவட்டங்களில் புதிய மூன்று பணிமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஏற்றுமதி விவசாய பயிர் அபிவிருத்தி செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டதுடன் பாரம்பரியமற்ற பிரதேசங்களிலும் ஏற்றுமதி விவசாய பயிர்கள் தொடரப்படுகின்றன.

ஏற்றுமதி விவசாயப் பயிர்களுக்கான சிறிய அளவிலான சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம்

விண்ணப்பம்

அறுவடைக்குப் பின்னரான உதவித்திட்டம் மற்றும் தர மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்

மேலதிக விபரங்கள்  …

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்க.