சிட்ரனெல்லா

Cymbopogon nardus/C. winterianus
குடும்பம் : Graminae

வரலாறு

சிட்ரனெல்லா தாவரம் பச்சை முதல் மஞ்சள் பச்சை இலைகளுடன் ஆன அடர்ந்த 1-2 மீற்றர் உயரமுள்ள வர்த்தக பயிராகும். சுமார் 2000 வருடங்களுக்கு முன் இருந்தே இந்தியாவின் சமய நிகழ்வுகளின் போது சிடரெனல்லா எண்ணெய் மற்றும் வாசனை இலைகள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான பழமை வாய்ந்த அறிக்கைகள் சுற்றிக் காட்டுகின்றன. இலைகள் சிட்ரனெல்லா எண்ணெய் பயன்படுத்தியமைக்கான முதலாவது சான்றிதழ் 17 ஆவது நுற்றாண்டில் கலாநிதி. நிக்கலஸ் கிரைமினால் அறிக்கை செய்யப்பட்டு இருந்தன. இலங்கையில் 18 ஆம் நூற்றாண்டில் சிற்றனெல்லா எண்ணைகளின் மாதிரிகள் லண்டன் மற்றும் லிஸ்போன் உலக வர்த்தக ஏலத்தில் காட்ச்சிபடுத்தப்பட்டு இருந்தமை புலனாகி உள்ளது. எவ்வாறாயினும்  இந்தோனேசியா ஏனைய சில நாடுகளிலும் இந்த துறையில் உள் நுழைந்ததன்  காரணமாக இலங்கையில் சிற்றனெல்லாவுக்கான கேள்வி குறைந்து சென்றது. 

உற்பத்தி மற்றும் பயன்பாடு

இலைகளில் இருந்தும் தாவரங்களின் ஏனைய பகுதிகளில் இருந்தும் எண்ணெய் பிரித்து எடுக்கப்படுவதாகவும் வர்த்தக உற்பத்தியாக முக்கியம் பெறுகின்றது. சிட்ரனெல்லா எண்ணெய் அழகு சாதன கைத்தொழிலிலும், சவர்க்காரம் மற்றும் அழுக்கி நீக்கி உற்பத்திகளிலும், பொலிஸ் பண்ணுதல், நிறப்பூச்சு மற்றும் பூச்சு கொல்லி கைத்தொழிலிலும் பயன்படுத்தப்படுகின்றன. அது பொதுவாக நுளம்புகளை விரட்டக் கூடியதாகவும் சுதேச மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. அதேப் போல் சில நாடுகளில் அதனை உணவுக்கு சுவையூட்டுவதற்காகவும் அதறகேற்ப பாணத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

பிரதானமாக வளர்க்கப்படும் பிரதேசங்கள்

சிட்ரனெல்லா செய்கைப் பண்ணப்படும் மொத்த நிலப்பரப்பு 1065 ஹெக்டேயர்கள் ஆகும். பயிர்ச் செய்கையானது பெரிய அளவில் ஹம்பந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இனவகைகள்

சைம்போபோகன் நாடஸ் (“ஹீன் பங்கிரி”) மற்றும் சிம்போபோகன் வின்டேரியனஸ் (“மகா பங்கிரி”) ஆகிய இனங்கள் இரண்டும் இலங்கையில் வளர்க்கப்படுகின்ற முக்கியமான இனவகைகளாகும்.

சைம்போபோகன் நாடஸ் (“ஹீன் பங்கிரி”)

“ஹீன் பங்கிரி” மரங்கள் பொதுவாக ஒடுக்கமானதாகவும் நீண்ட பிரகாசமாகவும் இலைகளைக் கொண்டு காணப்படும். இலையின்  இலை உறைகள் சிவப்பு ஊதா நிறத்தில் உள்ளன மற்றும் உலர்ந்த இலைகள் பற்றையின் அடிப்பகுதியில் சுருண்டு கிடக்கின்றன. மரங்கள் நிமிர்ந்ததாகவும் அடர்ந்து உயரமானதாகவும் சுமார் 1 மீற்றர் உயரத்தில் காணப்படும்.  வேர் அமைப்புக்கள் மண்ணின் ஆழத்திற்கு செல்லும் அத்துடன் இந்த தாவரம் இலங்கைக்கு சொந்தமானதாகும்.

சிம்போபோகன் வின்டேரியனஸ் (“மகா பங்கிரி”)

மரங்கள் அகன்றும் இலைகள் நீண்டு தட்டையாகவும் காணப்படும் கொடிகள் பெரிதாகவும் 1.5 – 2 மீற்றர் உயரத்திற்கு மேல் வளரும். வேர் மண்ணில் ஆழத்திற்கு செல்வதில்லை. மரம்மேற்பரப்பில் உள்ள போசனையை தாங்கி உள்ளது. எண்ணெய் இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது.

மண் மற்றும் கால நிலை தேவைப்பாடு.

மண்

சைம்போபோகன் நாடஸ் (“ஹீன் பங்கிரி”) பரந்தளவிலான மண்ணில் வளர்க்க முடியும்.அத்துடன் அது மணல் மண்ணிலும் வளரும். ஆனால் உர அமில ஈரக்களிமண் சிம்போபோகன் வின்டேரியனஸ் (“மகா பங்கிரி”) செய்கைக்கு விரும்பத்தக்கதாகும்.

காலநிலை :

சிட்ரனெல்லா வெப்ப வலய பிரதேசங்களில் நன்கு வளரும் அத்துடன் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 600 மீற்றர் உயரத்தில் இருந்து உபவெப்ப நிலை நிலையிலும் வளரும் சூடான வெப்ப நிலையைக் கொண்ட போதிய அளவிலான சூரிய ஒளி இதன் வளர்ச்சிக்கு தேவையாகும். சராசரி மழைவீழ்ச்சி வருடத்திற்கு 1500-1800 மி.மீற்றர் வரை போதுமாகும். சிட்ரனெல்லா வரட்சியின் கொடூரமான நிலமையையும் தாங்கவல்லது.

பயிர் ஸ்தாபகம்

நடுகைப் பொருட்கள்

சிட்ரனெல்லா உறிஞ்சிகள் அல்லது வேரூன்றிய தண்டு வெட்டுத் துண்டங்களில் இருந்து இனப்பெறுக்கம் செய்யப்படுகின்றது.

கள நடுகை : கள நடுகை பருவ கால மழையுடன் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அல்லது ஒக்டோபர் முதல் ஜனவரி வரை மேற்கொள்ள முடியும். “மகா பங்கிரி” மற்றும் “ஹீன் பங்கிரி” என்பவற்றிற்கு முறையே பரிந்துறைக்கப்பட்ட நடுகை இடை வெளியானது 90cm Χ 90cm மற்றும் 60cm Χ 60cm ஆகும். கள ஸ்தாபகத்தின் போது விரைவு முறையில் 1 கன்று என்பதற்கு பதிலாக 2-3 உறிஞ்சுகளை தனி குழி நடுகைகளில் மேற்கொள்ளலாம்.

பயிர் முகாமை

உரப்பிரயோகம் :

பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலவை – 750 கி.கி. /ஹெ

கலவை உட்கூறுகள் நிறையின் பகுதி கலவையின் போசனை
யூரியா (46%N) 1.5 17%N
பாறை பொசுபேற்று ( 28 % P2O5) 1.5 11% P2O5
மியுரியேற் ஒப் பொட்டாசு (60% K2O) 1 14% K2O
மரத்தின் வயது பெறும்போகம் (கலவை கி.கி. /ஹெ.) யாலபோகம் (கலவை கி.கி. /ஹெ.)
1 ஆம் வருடம் 190 190
2 ஆம் வருடம்   375 375

களை  அகற்றல் ​: வருடத்திற்கு 2-3 தடவைகள் களை அகற்றுவதை பரிந்துறை செய்யப்படுகின்றது.

மண் பாதுகாப்பு : செங்குத்தான சரிவுகள் பகுதிகளில் சிட்ரனெல்லா நடப்படுமானால் பொருத்தமான மண்ணரிப்பு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இலங்கையில் இப்பயிர்ச்  செயகையின் போது எவ்விதமான பொருளாதார முக்கியத்துவம் கொண்ட பீடை மற்றும் நோய்த் தாக்கங்கள் காணப்படவில்லை.

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயற்பாடு

அறுவடை

நடுகை மேற்கொண்டு 6-8 மாதங்களின் பின்னர் அறுவடையை மேற்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொறு 3 மாத இடைவெளியிலும் மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம். தாவரத்தின் நுனிப்பகுதி நில மட்டத்தில் இருந்து 12-20 செ.மீ. இற்கும் மேல் அறுவடை செய்ய முடியும். பதப்படுத்துவதற்கு முன்னர் 1-2 நாட்களுக்கு களத்தில் கவிழ்வதற்கு அனுமதிக்கவும். ஹெக்டேயருக்கு 20,000 கி.கிராம் இற்கும் மேல் தூய இலைகளை அறுவடை செய்ய முடியும். அத்துடன் அறுவடையானது விவசாய செயன்முறை மற்றும் தாவரத்தின் வயது அடிப்படை என்பவற்றை பொறுத்து மாறுபடலாம். ஹீன் பங்கிரியில் எண்ணெய் உற்பத்தி ஹெக்டேயருக்கு 60-80 கிலோ கிராம் ஆகும். அத்துடன் அதே வேலை மஹா பங்கிரி 100 கி.கிராம் ஆகும்.

செயன் முறை :

நீரில் அல்லது ஆவியில் அவித்த வர்த்தக ரீதியிலான சிட்ரனெல்லா எண்ணை பிரித்தெடுப்பின் பிரதான முறையாகும்.

தர நிலை தர விபரம்.

தரம் மொத்த ஜிரேனியல் உள்ளடக்கம்
தரம் 1 60%
தரம் 11 55%
தரம் 111 53%

ஓர் அளவு சிட்ரனெல்லா எண்ணெய் 1-2 அளவு எதனோல் அற்க்க கோலில் கரைத்தல் வேண்டும்.

மருத்துவ மற்றும் இரசாயண பண்புகள்

சிட்ரனெல்லா எண்ணெயில் இரசாயன உள்ளீடுகள்

இரசாயணயம் “ஹீன் பங்கிரி” “மஹா பங்கிரி”
சிட்ரனெல்லா % 5% >32%
ஜெரேனியல்  % 18% 12-25%
சிட்ரனெலோல் % 8% 11-15%
மொத்த ஜெரேனியல் % 52-60% 85%

மறுமொழி இடவும்