வெனிலா

Vanilla fragrans
குடும்பம் : Orchidaceae​

வரலாறு

வெனிலா பொருளாதார ரீதியில்  முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும்.  ஏனெனில் அது இயற்கை வெனிலாவின்  மூலப் பொருளாக காணப்படுவதனாலாகும்.  வெனிலா வடகிழக்கு மெக்சிகோவின் பூர்வீகமாகக் கொண்டுள்ளது என நம்பப்படுகின்றது. மெக்சிகோவின் பண்டைய கால டொடனாக்கோ இந்தியர்களினால் தான் வெனிலா தொடர்பான இரகசியங்கள் யாவும் முன் வைக்கப்பட்டன. அவர்கள் எஸடெக்ஸ் இனத்தவர்களினால் தோற்கடிக்கப்பட்ட போது அவர்களது கவர்ச்சிகரமான இந்த பழமான வெனிலா நெற்றுக்களை கைவிட்டு விடுமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். பின்னர் எஸடெக்ஸ் ஸ்பானியர்களினால் தோற்கடிக்கப்பட்டனர். ஸ்பைனின் கடற்படையான ஸ்பானியர்கள் ஹேர்னான்டோ, கோரடெல் விலை மதிக்கத்தக்கதான வெனிலா நெற்றுக்களுடன்  ஸ்பைனுக்கு திரும்பினார். அத்துடன் அதனை கொக்கோவுடன் ஒன்று சேர்த்து வழமைக்கு மாறான மனதிற்கு இனிய ஒரு பாணத்தை தயாரித்தார். இந்த விஷேடமான பாணம் என்பது (80) வருடங்களாக பிரபுக்கள் மற்றும் மிகவும் செல்வந்தர்கள் மாத்திரமே பருகி அக மகிழ்ந்தார்கள். 1602 ஆம் ஆண்டில் 1 ஆம் எலிசபத் மகாராணியின் வக்கீலான ஹக் மோர்கன் வெனிலாவை ஒரு சுவையாக பயன்படுத்தலாம் என  ஆலோசனை வழங்கினார். பெறுமதி மிக்க நெற்றுக்களின் செயலாக்கத் தன்மை இறுதியில் கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும் 1858 ஆம் ஆண்டுகளில் கொப்லி வெனிலா நெற்றுக்களில் இருந்து வெனிலினை தனிமைப்படுத்த முடியுமாக இருந்தது. இன்று வெனிலா பயிரானது மடகஸ்கார், இந்தோனேசியா, மெக்சிகோ, டஹிட்டி,  இலங்கை உட்பட மேலும் சில ஏனைய நாடுகளிலும் ஒரு வர்த்தகப் பயிராக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

உற்பத்தி மற்றும் பயன்கள்

வெனிலின் வெனிலா பயிரில் இருந்து பிரித் தெடுக்கப்படுகின்ற ஒரு பிரதான பயிராகும். இது இனிப்புப் பண்ட உற்பத்தி வாசனைப் பொருள் உற்பத்தி, மற்றும் மருத்துவ உற்பத்திகள் என்பவற்றின் போது ஒரு நறுமனம் தரவல்ல உள்ளீடாக பயன்படுத்தப்படுகின்றது.

பிரதானமான வளர்ப்பு பிரதேசங்கள்

இலங்கையில் வெனிலா மத்திய மற்றும் கீழ் நாட்டு ஈரவலயங்களில் ஒரு வீட்டுத் தோட்ட பயிராக மேற்கொண்டு வருகின்றனர். என்பது பிரதானமாக வரையறுக்கப்படுகின்றது. இதன் மொத்த விஸ்தீரணம் 10 ஹெக்டேயரை விடவும் குறைவாகும். பிரதானமாக வளர்க்கப்படுகின்ற பிரதேசங்களாக கண்டி, நுவரெலியா, மாத்ளை மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் ஆகும்.

இன வகைகள்

இலங்கையில் இன்னும் விஷேடமான இன வகைகள் ஏதும் கண்டறியப்படவில்லை நடுகை பொருளை பாரம்பரியமாக கொடியில் இருந்தே எடுக்கப்படுகின்றன.

மண் மற்றும் கால நிலை தேவைப்பாடுகள்

மண்

அதிக வளமான நன்கு வடிகட்டப்பட்ட ஈரழிப்பான களிமன் உகந்த்தாகும். மண்ணில் சேதனப் பொருட்கள் அதிகம் காணப்படுதல் வேண்டும்.  

காலநிலை

உயரம்  – கடல் மட்டத்தில் இருந்து 1000 மீ. மேற்பட்ட பகுதியில் வெனிலா நன்கு வளரும்.

வெப்பநிலை – 21-320C உகந்த்தாகும்.  இறுப்பினும் 270C வெப்ப நிலையில் வெனிலா நன்கு வளரும்.

மழை வீழ்ச்சி – 2000-2500 mm. போதுமானதாகும். ஆனால் பூக்க ஆரம்பிக்கையில் 2, 3 மாதங்களுக்கு வறட்சி காணப்படுதல் வேண்டும்.

பயிர் ஸ்தாபகம்

நடுகைப் பொருள்

தாவர இனப்பெறுக்க  முறையே சிறப்பானதாகும். தெரிவு செய்யப்பட்ட தாய் கொடிகளில் இருந்து 3’-4.5’ (1-1.5m) அளவிலான வெட்டுத் துண்டங்களை பெற்றுக் கொள்ளல் வேண்டும். வெட்டுத் துண்டங்களின் கீழ் முனைகள் கணுக்களுக்கு அருகாமையில் அமைந்திருத்தல் வேண்டும். கீழ் முனைகளில் இருந்து 3-4 இலைகள் அகற்றுதல் வேண்டும். தூண்டக்கூடிய மொட்டுக்களை வெட்டுக சுமார் 7 நாட்கள் ஒரு ஆதரவின் துணையுடன்  தொங்க விடுதல் வேண்டும்.

3 முடிச்சு 4 முடிச்சு வெட்டுக்களை 8” X 5” அளவிலான பொலிதீன் உறைகளில் நடலாம். அத்துடன் வெனிலா கன்றுகளில் தளிர் வளர்ந்ததன் பின்னர் நடுகை பொருளை பயன்படுத்த முடியும்.

கள நடுகை வெனிலா ஒரு நிழல் நாடும் தாவரமாகும். ஆகவே உயிர் ஆதரவு மரங்கள் (50-60%) போதிய நிழல் வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகினற் கிளிரிசீடியா மிகவும் பொருத்தமான நிழல் மரமாகும். ஆதரவு மரங்கள் வெனிலா நடுகை மேறகொள்வதற்கு முன்னரே 6 மாதங்களுக்கு முன்னராவது நடுகை செய்து இருக்க வேண்டும்.

இடைவெளி  – 2.5m x 1.5 m (8’ x 5’) (2000 வெட்டுத் துண்டங்கள்/ஹெ) மழை ஆரம்பிக்கையில் நடுதல் வேண்டும். சுமார் 2’ விட்டம் கொண்ட 8’ ஆழம் வரை ஆதரவின் அடிப் பகுதியை சுற்றி மண்ணை தளர்த்தவும்.  அதன் பின்னர் 2-3 கூடை சேதன உரத்தினை சேர்க்கவும். ஆதரவு மரத்தில் இருந்து மற்றும் நடுகை குழியின் மேற்பரப்புக்கு 10 (4’’) ஆழமான சுவடு அமைக்கவும். அத்துடன் வெட்டுத் துண்டங்களை கீழ்வெட்டுத் துண்ட முனையில் இருந்து 3 செ.மி. வெட்டி காற்று வெளியேறக் கூடியவாறு சுவடுகளில் கிடையாக வைக்கவும். வெட்டுத் துண்டங்கள் புரட்டப்பட்ட மண்ணில் உறுதியாக நட்டவும் வெட்டுத் துண்டின் மேல் முனை துனை ஆதரவு மரத்துடன் கட்டி விடுதல் அத்துடன் சேதனப் பொருட்களை 7.5 – 15 cm தடிப்புக்கு தழைக்கூளம் இடுதல் வேண்டும்.

பயிர் முகாமை

கொடிகளின் பயிற்சி

வெட்டுத் துண்டங்கள் வளர ஆரம்பிக்கையில் மொட்டுக்கள் வளரத் தொடங்குகையில் மேல்நோக்கி கொடிகள் வளர்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஆதரவு மரங்களின் உச்சத்தை கொடி  அடைகின்ற போது அவை கீழ்நோக்கி வருவதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தை அடையும் போது மேலும் 30 -45 cm (1-1.5’) மண்ணின் மேல் வளர்வதற்கு இடமளிக்கவும். அத்துடன் தண்டினை சுருட்டி மீண்டும் ஆதரவு மரத்தின் மேல்நோக்கி வளர்வதற்கு இடமளிக்கவும். கொடியில் பல சுழல்கள் உருவாகும் வரையில் இச்செயற்பாட்டை மீண்டும் மீண்டும் செயற்படுத்தவும் சுழல்களின் தரைப் பகுதியில் சேதன உரத்தினால் மூடப்பட்டு இருத்தல் வேண்டும்.

பூப்பதற்கு தூண்டுதல் 

ஆகக்கூடிய எண்ணிக்கையினாலான பூக்கள் பூப்பதற்கு செயற்கை முறையில் தூண்டப்படுதல் வேண்டும். பொதுவாக இந்த செயற்பாடு ஜனவரி மாதம் மேற்கொள்ள வேண்டும். அதற்காக 5-7 முனைகள் வீழ்ச்சியடைந்த  முதிர்ந்த கிளைகளின் நுணியில் இருந்து அகற்றப்படுகின்றன. சூரிய  ஒளியில் 70% – 80% பெற்றுக் கொள்வதன் முகமாக நிழல் மரங்கள் கத்தரிக்க வேண்டும்.

உரமிடல் பொதுவாக செயற்கை முறையிலான உரம் ஏதும் வெனிலா மரத்திற்கு பிரயோகிப்பது இல்லை. ஆனால் சேதன பசளை முக்கியமாகும். மழைக்காலம் ஆரம்பிக்கின்ற போதே கூட்டெறு பிரயோகிக்க வேண்டும். ஆகக் குறைந்தது ஒவ்வொறு 6 மாதத்திற்கு ஒரு தடவை  மரங்களுக்கு தூய அல்லது காய்ந்த இலைகளைக் கொண்டும் அல்லது நிழல் மரங்களில் இழை குழைகலைக் கொண்டும் தழைக்கூளம் இடுதல் வேண்டும்.

மகரந்தச் சேர்க்கை

இயற்கை மகரந்தச் சேர்க்கை அரிதாகவே நெற்றுக்களை உருவாக்குகின்றது. வெனிலாவின் செயற்கை முறையான மகரந்தச் சேர்க்கை அவசியமாகும். பூக்கள் சுயமாக கருக்கட்டப்படுகின்றன. மகரந்தத்தை ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு குறிக்கு அல்லது மடலுக்கு அல்லது ரொஸடெலிம் மற்றும் குறிக்கு எதிராக மற்றொரு மகரந்தத்தை அழுத்தவோ ஒரு வெளி நிறுவனங்களின் உதவியின்றி சுய மகரந்தச் சேர்க்கைக்கு இடாது. பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் தான் பூப்பதற்கு ஆரம்பிக்கின்றன. அத்துடன் பூக்கள் சிறிய அல்லி போன்றதாகவும் பச்சை மஞ்சல் நிறத்திலும் காணப்படும். ஒரு கொத்தில் 20 பூக்கள் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாளில் திறக்கப்படும் ஒரு கொத்தில் 2 அல்லது 3 பூக்கள் காணப்படும். ஒரு கொத்தின் முழுமையான பூக்கும் காலம் சராசரியாக 24 நாட்களாகும். மலர்கள் காலையில் திறந்து மாலையில் மூடுகின்றன. ஒரு போதும் மீள திறக்க மாட்டாது. மகரந்த சேர்க்கைக்கு உட்படாது இருந்தால் அடுத்த நாள் அது உதிரும். மகரந்தச் சேர்க்கைக்கான உச்ச நேரம் இடைக்காலை நேரமாகும் (மு.ப.7 –  மு.ப.11).

ஒரு கொத்தில் 20- 30 பூக்கள் காணப்படும்.

ஒருகொடியில் இருந்து 100-15 நெற்றுக்களை பெறலாம்.

பயிர் பாதுகாப்பு

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்ற  பீடை மற்றும் நோய் ஏதும் பதியப்படவில்லை.

அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை

அறுவடை   

மகரந்த  சேர்க்கையில் இருந்து 8-9 மாத்த்திற்கு பின்னர் நெற்றுக்கள் முதிர்ச்சி அடைகின்றன. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் அறுவடை மேற்கொள்ளப்படுகின்றன. பச்சை காய்களின் நுணி மஞ்சள் நிறமாக மாற்றமடைய ஆரம்பிக்கையில் நெற்றுக்களின் கீழ் முனையை திறப்பதற்கு முன் அறுவடை மேற்கொள்வது சிறப்பாகும். அறுவடையின் போது முதிர்ந்த நெற்றுக்களை மாத்திரமே அறுவடை செய்ய வேண்டும். நன்கு பழுத்த காய்கள் 60-70 அறுவடை செய்கையில் 1 கி.கிராம் நெற்றுக்களையும் மற்றும் 6 கி.கி பச்சை காய்களில் இருந்து குணப்படுத்துகை காய்கள் 1 கி.கிராமையும் பெறலாம். காய்கள் ஆகக் குறைந்தது 6 செ.மி. நீளமானதாக இருத்தல் வேண்டும். சிறந்த தரமான நெற்றுக்கள் 10 செ.மீ. இனை விடவும் அதிகமானதான நீளத்தைக் கொண்டிருக்கும். மகரந்த சேர்க்கைக்கு 2 மாதத்தின் பின்னர் சிறிய நெற்றுக்களை 10 செ.மீ. இனை விட  குறைவான நீளங்களை உடையவற்றை அகற்றுவதன் மூலம் தரமான தொகுதியை பெறலாம். ஒரு கொத்தில்     8-10 நெற்றுக்களை அனுமதித்து  ஏனைய நெற்றுக்களை அகற்றவும். நெற்றுக்களை மேலே நிமிர்த்தி திருப்புவதன் மூலம் பறிக்க வேண்டும். வெட்டு முடிவில் உருவாகின்ற பங்கசை தவிர்க்க  கத்தரிக்கோல் அல்லது கத்தி பயன்படுத்தலாகாது.

அறுவடை

நடுகை மேற்கொண்டு 3 வருடங்களுக்கு பின் ஹெக்டேயருக்கு 500- 800 கி.கிராம் அறுவடை செய்யலாம். அதிக பட்ச்ச அறுவடை காலம் 7-8 வருடங்கள் ஆகும்.

செயன்முறை

செயன்முறையில் பல முறைகள் காணப்படுகின்றன. அனால் ஒவ்வொன்றிலும் மற்றும் சகல முறைகளிலும் அடிப்டை படி முறைகள் ஒன்றே வையாவன வருமாறு

இறக்கச் செய்தல் அல்லது வாடச்செய்தல் – நறுமனம் மற்றும் சுவை உற்பத்திக்காக என்சைம் செயலாக்கத் திறன் பொறுப்பினை  ஆரம்பித்து வைத்தல். அப்பொது நெற்றுக்கள கடும் நிறத்தை அடையும்.

வியர்த்தல்  – என்சைம்மெடிக் எதிர்வினையை மேம்படுத்துவதற்கு வெப்ப நிலையை அதிகரித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் நொதித்தலை தடுப்பதற்குக் கூடியவரையில் உலர்த்துவதற்கு தூண்டவும். நெற்றுக்களில் கடும் கபில நிறத்தை விருத்தி செய்தல்.

உலர்த்துதல் – மெதுவாக உலர்த்துதல் விதைகள் அதன் அசல் நிறையில் மூன்றில் ஒரு பகுதியை அடைகின்றது.

நிபந்தனைகள் – விரும்பிய நறுமனம் மற்றும் சுவையை முழுமையாக விருத்தி அடைவதை அனுமதிப்பதற்கு மூன்று மாத காலத்திற்கு ஒரு பெட்டியில் நன்கு அடைத்து களஞ்சியப்படுத்தி வைக்கவும்.

குனப்படுத்தப்பட்டவெனிலா விதைநெற்று நறுமனம் மற்றும் சுவை ஆகிய இரண்டும் உலக சநதையின் விதையின் வர்த்தக பெறுமதியை தீர்மானிக்கும் பிரதான பண்புகளாகும். உச்ச நறுமனத்தை சுவை அதே போல் பௌதீக தோற்றம் என்பவற்றை பாதுகாப்பதற்காக பதப்படுத்தல் கவனமாக மேற்கொள்ளல் வேண்டும். அத்துடன் முதிர்ந்த வெனிலா விதைகள் பரிக்கப்பட்ட உடன் அவை அளவு மற்றும் நிலமைக்கு இயைய 63O C கொதி நீரில் பெரிய ஒரு  அண்டாவில் (பாத்திரம்) அமிழ்த்தவும். அத்துடன் அதனை விரைவாக வடிகட்டி சூடாக காணப்படும் விதைகளை கடும் நிறத்தையுடையதான பருமத்தித் துணி ஒன்றினால் நன்கு வரிந்து கட்டவும். அதன் பின்னர் ஒரு நாள் கழித்து ஒரு மணிநேரம் திறந்த சூரிய  ஒளியில் தரையில் பரத்தி உலர்த்தவும். ஒரு வார காலத்திற்கு விதையின் ஒவ்வொறு நாளும் சூரிய ஒளியில் இரண்டு மணி நேரம் உலர்த்தவும். உலருகின்ற தடவைகளுக்கு இடையேயும் துனியினால் சுற்றவும். இந்த படி நிலையில் வெனிலா நெற்றுக்கள்  நன்கு மிருதுவாக்கப்படுகின்றன. அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக வெனிலா தனது சுவை மற்றும் நறுமனத்தை விருத்தி செய்வதற்கு இயலுமாகின்ற வகையில் அவற்றினை நிழல் உள்ள இறாக்கைகளில் அல்லது நன்கு காற்றோட்டமுள்ள தரையில் பரப்பி வைக்கவும். குணப்படுத்துகை செயற்பாடுகளுக்கு பின்னர் திறந்த காற்று இடைவெளியில் வெனிலா களஞ்சியப்படுத்தி வைத்தல் மற்றும் கட்டத்திற்கு தொகுக்கப்பட முன்னர் அவை அவற்றின் நிறத்திற்கு ஏற்ப தரப்படுத்தப்படுவதுடன் இந்த நேரத்தின் போது அவற்றினது நறுமனம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிலைய தர விபரக்குறிப்பு

நெற்றுக்களின் நீளம்  –17-25cm  இற்கும் இடையில்  வாசனை – பாரம்பரிய வெனிலா வாசனை

 நிறம் – கடும் கபில நுறம்ம் அல்லது கருப்பு நிறம்  தோற்றம்  – பளபளப்பான எண்ணெய் மேற்பரப்பு

 பூச்சு தாக்குதல் அல்லது ஏனைய திட்டுக்கள்

 தூய்மை – புறம்பான பொருள், விலங்குகள் அல்லது தாவர பகுதிகள் அல்லது பூச்சிகளின் ஈரப்பதம்  –25%-30% இடையிலாகும்.

மருத்துவ மற்றும் இரசாயன பண்புகள் வெனிலா சாற்றின் பல வகையான சேர்மானங்கள் காணப்படுகின்றன. வெனிலாவின் சுவை மற்றும் நறுமனம் பண்பியல்புக்கு வெனிலின் (4–ஹைட்ராக்ஸி – 3-மெத்தாக்ஸிபென்ஸல்டெஹைட்) முதன்மையான பொறுப்புச் செய்ய வேண்டி உள்ளது. எவ்வாறாயினும் வெனிலா சாற்றில் நூற்றுக்கணக்கான சிறிய உட்கூறுகள் காணப்படுகின்றன. வெனிலா எண்ணெயில் உள்ள பிரதான சேர்மானம் பைபரோனல் (ஹீலியோட்ரோபின்) ஆகும்.

மறுமொழி இடவும்